சென்னையில் திடீர் கனமழைக்கான காரணத்தை வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.
காற்றின் திசை மாறுபாடு காரணமாக சென்னையில் நேற்று கனமழை பெய்ததாகவும்சென்னையில் மிதமான மழை தொடரும் எனவும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சியில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டல மேலடுக்கிற்கும், கீழடுக்கிற்கும் இடையே நிலைத்தன்மை குறைந்து இடி மின்னலுடன் மழை பெய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours