திருப்பதி மலைப்பாதையில் மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் அலறியடித்து ஓடும் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இன்று காலையில் ஒரு சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு சிறுத்தை திருப்பதி மலைப்பாதையில் உலாவி வருவதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
திருப்பதியில் கடந்த வெள்ளிக்கிழமை சிறுத்தை தாக்கி 6 வயது சிறுமி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours