DISTRICT

வீட்டுக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் !

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட சேமுண்டி கிராமத்தில் வீட்டுக்குள் புகுந்தசிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது ஸ்ரீமதுரை ஊராட்சி. இங்குள்ள சேமுண்டி கிராமத்தில் இடும்பன்என்பவர் வசித்து வருகிறார். சனிக்கிழமை இவரது வீட்டுக்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது. அப்போது வெளியில்சென்றிருந்த இடும்பன், வீட்டுக்குத் திரும்பி வந்த போது வீட்டுக்குள் உறுமல் சப்தம் கேட்டதும் மிரண்டுபோயிருக்கிறார். வீட்டுக்குள் சிறுத்தை இருப்பதை உறுதி செய்துகொண்ட இடும்பன், உடனடியாக வீட்டைபூட்டிவிட்டு கிராம மக்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வனத்துறையினர் சம்பவஇடத்துக்கு விரைந்தனர். இது குறித்து நம்மிடம் பேசிய இடும்பன், “நான் தேயிலை தோட்டத்துல வேலைசெய்துவிட்டு மதியம் 12 மணி அளவில் வீட்டுக்குச் சென்றேன். அப்போது என்னுடைய வீட்டுக்குள் உறுமல் சப்தம்கேட்டது. என்னவென்று எட்டிப் பார்த்தபோது, வீட்டுக்குள் சிறுத்தை இருந்தது. என்னைக் கண்டதும், அது என் மேல்பாயப் பார்த்து. நான் சுதாரித்து, பயந்து ஓடிவந்து வெளிக்கதவை பூட்டி விட்டேன்” என்றார். இந்நிலையில், முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் வனத்துறையினர், மயக்க ஊசி செலுத்திசிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

DISTRICT

கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு !

சென்னைக்கு குடிநீர் அனுப்பும் வகையில் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது வீராணம் ஏரி. இது கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாகும். இதன் முழு [more…]

DISTRICT

குழந்தைகளின் இறப்பிற்கு காரணம் மின்வாரியத்தின் அஜாக்கிரதையா ?!

கோவையில் மின்சாரம் தாக்கி சிறுவன், சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் பூங்காவில் மின்கசிவு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து காவல் துறையினர், மின் வாரியத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை சரவணம்பட்டி அருகே துடியலூர் சாலையில் [more…]

DISTRICT

சிகிச்சை பலனின்றி ஆண் யானை உயிரிழப்பு!

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ஆண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் கடந்த சில மாதங்களில் யானைகள் அடுத்தடுத்து உயிரிழப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் [more…]

DISTRICT

கடலுக்கு செல்ல தடை – வேலையே இழந்த 20000 மீனவர்கள்!

வங்கக்கடலில் வீசி வரும் கடும் சூறைக்காற்று காரணமாக, தூத்துக்குடியில் 3,000க்கும் மேற்பட்ட நாட்டு மற்றும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால், 4வது நாளாக 20,000 தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் கடந்த [more…]

DISTRICT

பட்டாசு மூலப்பொருள் தயாரிக்கும் ஆலையில் வெடி விபத்து!

சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் பட்டாசு உற்பத்திக்கு தேவையான அலுமினிய பவுடர் தயாரிக்கும் ஆலையில் மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட 5 பேர் காயமடைந்தனர். சிவகாசி அருகே செங்கமலப்பட்டி – [more…]

DISTRICT

கன்னியாகுமரி கடலில் மூழ்கி மாணவர்கள் 4 பேர் பலி!

கன்னியாகுமரி அருகே கணபதிபுரத்தில் கடலில் குளித்த இரண்டு மாணவிகள் உட்பட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் கடல் அலையில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. திருச்சி எஸ்.ஆர்.எம் [more…]

DISTRICT

மர்மமான முறையில் இறந்த காங்கிரஸ் தலைவர், விசாரணைக்காக அமைக்கப்பட்டது தனிப்படை!

திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே. ஜெயக்குமார் தனசிங், எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே கரைச்சுத்து புதூர் கருத்தையா கார்டன் பகுதியைச் [more…]

DISTRICT

கோயிலை அடைந்தார் கள்ளழகர் !

கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கோயிலிருந்து புறப்பட்ட கள்ளழகர் சுமார் 40 லட்சம் பக்தர்களுக்கு அருள்பாலித்துவிட்டு இன்று கோயிலை அடைந்தார். அங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலர்கள் தூவி வரவேற்றனர். பின்னர் 21 பெண்கள் [more…]

DISTRICT

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாநில மதிப்பீட்டு குழுவினர் திடீர் ஆய்வு !

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை சென்னை இயக்குநரக டாக்டர்கள் கொண்ட மாநில மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்தனர். பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நவீன வசதிகளுடன் செயல்பட்டு வருவதால், கடந்த 2019ம் [more…]