ஆதார் துறையில் வேலை வாய்ப்பு; எப்படி விண்ணப்பிப்பது?

Spread the love

ஆதார் துறையின் கீழ்வரும் UIDAI நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Deputy Director பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

UIDAI நிறுவனத்தில் காலியாக உள்ள Deputy Director பணிக்கென 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Deputy Director பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மத்திய அரசு / யூனியன் பிரதேச நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level – 8 / 9 / 10 என்ற ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 03 ஆண்டுகள் முதல் 06 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 56 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

இந்த UIDAI நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Pay Matrix Level – 11 என்ற ஊதிய அளவின் படி, ரூ.67,700/- முதல் ரூ.2,08,700/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

Deputy Director பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.05.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours