அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெறும் முதல் சுற்று ஆட்டங்களில் முன்னணி வீரர் வீராங்கனைகள் விளையாடுகின்றனர்.
நியூயார்க்கில் நடைபெறும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், முதல் சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவ், ஹங்கேரி வீரர் அட்டிலா பாலாசை (Attila Balázs) எதிர்த்து விளையாடுகிறார்.
மற்றொரு ஆட்டத்தில் பிரிட்டனின் ஆண்டி முர்ரே, பிரான்சின் கோரன்டின் மவுட்டட்டை (Corentin Moutet) எதிர்கொள்கிறார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் அஸ்லின் குரூகர் (Ashlyn Krueger), செக் குடியரசின் மேரி பவுஸ்கோவாவை (Marie Bouzková) எதிர்கொள்கிறார்.
மற்றொரு ஆட்டத்தில் தென்கொரியாவின் ஹான் நா லே (Han Na-lae), செக் குடியரசின் மார்க்கெட்டா வோண்ட்ரூசோவாவை ( Markéta Vondroušová) எதிர்த்து விளையாடுகிறார்.
+ There are no comments
Add yours