அடர்பனி காரணமாக இருண்டது டெல்லி!

Spread the love

டெல்லியில் தற்போது கடுங்குளிர் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவுக்கு குளிர் இருந்தது. வெப்பநிலையை கணக்கிட்டால் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரியாக இருந்தது. ஆனால் இதற்கு முன்பு இந்த சீசனில் 4 டிகிரி வரை சென்றிருக்கிறது. இருந்தாலும் அதிகபட்ச வெப்பநிலை நேற்று மிகக்குறைவாக இருந்தது.

குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரியாக இருந்தபோது அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி வரை சென்றது. ஆனால் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 12.5 டிகிரிக்கு மேல் செல்லவில்லை. குறைந்தபட்ச வெப்பநிலைக்கும், அதிகபட்ச வெப்பநிலைக்கும் இடையே 5 டிகிரி மட்டுமே வித்தியாசம் இருந்தது. இதனால் மக்கள் அதிகப்படியான குளிரை உணர்ந்தனர். மலை வாசஸ்தலங்களான சிம்லா, தர்மசாலாவில்கூட அதிகபட்ச வெப்பநிலை இவ்வளவு குறைவாக இல்லை.

டெல்லியில் நேற்று காலையில் இருந்து மாலைவரை ஒருநேரம்கூட சூரியனை பார்க்க முடியவில்லை. அடர்பனி காரணமாக நாள் முழுவதும் இருண்ட வானிலையே காணப்பட்டது. இதனால் இரவில் குளிர் மேலும் அதிகரித்து மக்கள் நடுநடுங்கிப் போனார்கள்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours