ஜி20 உச்சி மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு டெல்லி போலீசார் தேசிய தலைநகர் யூசுப் சராய் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜி20 உச்சி மாநாடு:
டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் 18வது ஜி20 உச்சி மாநாடு வரும் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.இந்த இரண்டு நாள் உச்சி மாநாட்டில் 20 உறுப்பு நாடுகள் உட்பட 40 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
பங்கேறக்கும் நாடுகள் :
அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, அமெரிக்கா , இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம். பங்களாதேஷ், எகிப்து, மொரிஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளை இந்தியா விருந்தினர் நாடுகளாக அழைத்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட டெல்லி நகரம்:
இந்த நிலையில் டெல்லியில் செப்டம்பர் 9-10 தேதிகளில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டுக்கு தயாராகும் வகையில், சாலைகள், முக்கிய சந்திப்புகள் என டெல்லி முழுவதும் பூஞ்செடிகள் ,ஓவியங்கள், கைவினைப்பொருட்கள், சிலைகள், வண்ண விளக்குகள் பொருத்தப்பட்ட கட்டிடங்களால் டெல்லி நகர் முழுவதுமே புதுப்பிக்கப்பட்டு உள்ளது.
அதிநவீன பாதுகாப்பு:
இதனை தொடர்ந்து,இந்தியாவில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாடு முக்கியதுவம் வாய்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் இருக்க இந்திய ராணுவம் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் குழுக்கள், மோப்ப நாய்கள் மற்றும் அதிநவீன எதிர்-ட்ரோன் அமைப்புகளை நிலைநிறுத்துவது ஆகியவை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி உள்ளனர்.
இதற்கிடையில், ஜி20 மாநாட்டை முன்னிட்டு, டெல்லி போலீஸார் நகரம் முழுவதும் வாகனச் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். நேற்றிரவு இரவு முதல் இன்று அதி காலை வரை யூசுப் சாரையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது, அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
+ There are no comments
Add yours