திரைப்பட தேசிய விருதுகள் !

Spread the love

தில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்த கொண்ட இயக்குநர் வசந்த் உள்ளிட்ட தேசிய திரைப்பட விருது தேர்வுக் குழுவினர் விருது பெற்ற படங்களை அறிவித்தனர்.

இதில் தேசிய அளவில் சிறந்த படமாக மாதவன் இயக்கி நடித்த, தி ராக்கெட்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளது.


புஷ்பா திரைப்படத்தில் நடித்த அல்லு அர்ஜூன் சிறந்த நடிக்கருக்கான விருது பெற்றார்.


கங்குபாய் கத்தியாவாடி படத்தில் நடித்த ஆலியா பட்டும், மிமி படத்தில் நடித்த கீர்த்தி சனோனுக்கும் சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர் ஆர் ஆர் திரைப்படம் சிறந்த பொழுதுபோக்கு படம், சிறந்த நடனம், சண்டை, பின்னணி இசை, விஎஃப்எக்ஸ், ஆகிய பிரிவுகளில் விருதுகளை தட்டிச்சென்றது.


இந்த படத்தில் சிறந்த பின்னணி இசை அமைத்த கீரவாணிக்கு விருது கிடைத்துள்ளது.

தமிழில் சிறந்த திரைப்படமாக கடைசி விவசாயி திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதில் நடித்த நல்லாண்டிக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.



தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருதை கஷ்மீர் பைல்ஸ் வென்றுள்ளது.
லெனின் இயக்கிய சிப்பிகளின் சிற்பங்கள் என்ற் ஆவணப் படம் சிறந்த கல்விக்கான திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது.

ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்ற பாடலை பாடிய காலபைரவா சிறந்த பாடகருக்கான விருதை பெற்றார்.


இரவின் நிறல் படத்தில் மாயவா, சாயவா பாடலை பாடிய ஸ்ரேயா கோஷல் சிறந்த பின்னணி பாடிகிக்கான விருதை வென்றார்.


புஷ்பா படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கருவறை குறும்படத்தில் இசை அமைத்த ஸ்ரீகாந்த் தேவாவிற்கும் விருது கிடைத்துள்ளது.


தேசிய விருதுகளை வென்ற திரை கலைஞர்களுக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours