பாகிஸ்தானைச் சேர்ந்த கமர் மொஹ்சின் ஷேக் என்ற பெண், கடந்த 27 ஆண்டுகளாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒவ்வொரு ஆண்டும் ராக்கி கயிறு ,வாழ்த்து அட்டை அனுப்பி வாழ்த்து தெரிவித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வடமாநிலங்களில் ரக்ஷா பந்தன் பண்டிகை சகோதரத்துவத்தை விளக்கும் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி க்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டது.
அப்போது சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி சகோதரிகளை ஆசீர்வாதம் செய்து பரிசுகள், பணம், நகை ஆகியவற்றை அன்பளிப்பாக வழங்குவார்கள்.
அந்த வகையில்,பாகிஸ்தானை சேர்ந்த கமர் மொஹ்சின் ஷேக் என்பவர் கடந்த 27 ஆண்டுகளாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ராக்கி கயிறு மற்றும் வாழ்த்து அட்டை அனுப்பி வருகிறார்.
1953 இல் கமர் மொஹ்சின் ஷேக் என்ற பெண் பாகிஸ்தானில் பிறந்தார். அவர் ஒரு இந்தியரைத் திருமணம் செய்து 1986 இல் இந்தியாவுக்குச் குடிபெயர்ந்தார். அவருக்கு இந்தியாவில் குடும்பம் எதுவும் இல்லை என்பதால் பந்தன் நாளை முன்னிட்டு மோடி ஆர்எஸ்எஸ் அமைப்பில் ஊழியராக இருந்த காலத்தில் ராக்கி கயிறு, வாழ்த்து அட்டைகள் வழங்கி ஆசி பெற்று வந்தார்.
இதனையடுத்து குஜராத் முதல்வராக மோடி பதவியேற்ற பிறகு சந்திக்க நேரம் இல்லாமல் போனதால் தபால் மூலம் ராக்கி கயிறு, வாழ்த்து அட்டைகளை மோசின் ஷேக் அனுப்பி வருகிறார்.மேலும் கடந்த 20 ஆண்டுகளாக பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்ட முயன்று வருகிறேன்” எனத் தெரிவித்தார்.
+ There are no comments
Add yours