”எல்லை தாண்டிய பயங்கரவாதம்..” எச்சரிக்கை விடுத்த மத்திய அமைச்சர் வி.கே.சிங் !!

Spread the love

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்பட உலக நாடுகள் பாகிஸ்தானை தனிமைப்படுத்தி அதன் மீது அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் (இந்திய முன்னாள் ராணுவ தளபதி) வி.கே.சிங்(VK Singh) வலியுறுத்தியுள்ளார்.

ஜம்முகாஷ்மீர் அனந்த்நாக் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இந்த துப்பாக்கி சூடு சமபவத்தில்,ராணுவ கர்னல் மன்பிரீத் சிங், பட்டாலியன் கமாண்டிங் மேஜர் ஆஷிஷ் தோனக் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீஸ் டிஎஸ்பி ஹுமாயுன் பட் உள்ளிட்ட 4 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும் இந்த என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலையில்,ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் இரண்டு மூத்த அதிகாரிகள் உட்பட 4 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்த்து பாகிஸ்தானை தனிமைப்படுத்தவும், அவர்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) வி.கே.சிங் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.

மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் வெளிச்சத்தில், நமது அணுகு முறையை நாம் பரிசீலிக்க வேண்டும். உலகளவில் பாகிஸ்தானை தனிமைப் படுத்தாவிட்டால், அவர்கள் எல்லையில் தொடர்ந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவார்கள்.அவர்கள் மீது அழுத்தம் கொடுக்க, அவர்களை தனிமைப்படுத்த சர்வதேச அளவில் வற்புறுத்த வேண்டும்.

தங்கள் வழிகளை சரிசெய்யும் வரை சாதாரண உறவுகளை மீண்டும் தொடங்க முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்” என்று முன்னாள் இராணுவத் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours