நிபா வைரஸ், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது. குறிப்பாக பழந்தின்னி வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. மேலும், அசுத்தமான உணவு மற்றும் தொற்று பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.
முதல் முதலாக, 1999ல் மலேஷியாவில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது.
நிபா வைரசால் பாதிக்கப்படுவோருக்கு கடுமையான தலைவலி, காய்ச்சல், சோர்வு, சுவாச பிரச்னைகள் ஏற்படும். சிலருக்கு அறிகுறிகள் இல்லாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது.
வைரஸ் பரவிய, 5 – 14 நாட்களுக்குள் இந்த அறிகுறிகள் தென்படும். இதற்கு தடுப்பூசி எதுவும் இல்லை.
நிபா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும்.
+ There are no comments
Add yours