சென்னையில் இருந்து அயோத்திக்கு, எதிர்வரும் பிப்ரவரி 8-ம் தேதி, ‘பாரத் கவுரவ்‘ யாத்திரை ரயில் இயக்கப்படஉள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய ரயில்வே சார்பில் சுற்றுலா, வரலாறு, பாரம்பரியம், ஆன்மிகம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புரயில் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ‘பாரத் கவுரவ் ரயில்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன்மூலம்நாட்டின் பல்வேறு சுற்றுலா தலங்கள், ஆன்மிக தலங்களுக்கு சென்று வர முடியும்.
இதற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு பாரத் கவுரவ் ரயில்களை அறிவித்துரயில்வே நிர்வாகம் பயணிகளை கவர்ந்து வருகிறது. தென்காசி – கோவா, கோவை – ஷீரடி, பெங்களூரு – காசி, சென்னை – காசி என பல்வேறு பாரத் கவுரவ் ரயில்கள் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டுள்ளன.
அந்த வரிசையில் தற்போது சென்னையில் இருந்து அயோத்திக்கு பாரத் கவுரவ் ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தரயில் பிப்ரவரி 8-ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட உள்ளது. ஏழு நாட்கள் கொண்ட இந்த ஆன்மிகயாத்திரையில், அயோத்தி தரிசனம், காசியில் கங்கை நதியில் புனித நீராடி விஸ்வநாதர் – விசாலாட்சி, அன்னபூரணி தரிசனம் ஆகியவற்றுடன் கும்பமேளாவை முன்னிட்டு யமுனை, கங்கை, சரஸ்வதி நதிகள் இணையும்திரிவேணி சங்கமத்தில் புனித நீராடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலாவில் பங்கேற்கும் ஒருவருக்கு 16,400 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சைவ உணவுஉள்ளிட்ட வசதிகள் இதில் அடங்கும். இதுகுறித்து, மேலும் தகவல் பெற, 73058 58585 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என்று ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours