தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதிகாலை வேலைகளில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளதாகசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை முழுமையாக நீங்கி இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில்மழை முற்றிலுமாக குறைந்து வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்தநிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை ஆய்வு மையத்தின் வானிலை ஆய்வுக்கான செய்தி குறிப்புவெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில்அதிகாலை வேலைகளில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் வருகிற 17ம் தேதி வரைஇதே நிலை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தென் தமிழகமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரிமற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக பயணிக்க அறிவுறுத்தல் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஓரிருஇடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 செல்சியஸ்ஒட்டியும் இருக்கக் கூடும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதிகாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது