CRIME

இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

ராய்ப்பூர்: நாக்பூரில் இருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் காரணமாக விமானம் அவசர அவசரமாக ராய்ப்பூரில் தரையிறக்கப்பட்டது. 187 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் இண்டிகோ விமானம் நாக்பூரில் இருந்து [more…]

National

இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தை அடுத்து இண்டிகோ விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து நியூயார்க் நகருக்கான ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து அந்த விமானம் டெல்லி இந்திரா [more…]

Blog

விமானத்தில் புகைப்பிடித்த பயணி; போலீசாரிடம் ஒப்படைப்பு

சென்னை: குவைத்தில் இருந்து இன்று சென்னை வந்த விமானத்தில் புகைப்பிடித்த பயணி, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். குவைத்தில் இருந்து 178 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் இன்று சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. விமானம் [more…]

BREAKING

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு !

சென்னையில் இருந்து கொல்கத்தாவிற்கு கிளம்ப இருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து பயணிகள் உடனடியாக இறக்கி விடப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து [more…]

National

ஒற்றைப் பயணியால் டெர்மினலுக்கே திரும்பிய இண்டிகோ விமானம்!

மும்பையிலிருந்து கிளம்ப யத்தனித்த விமானம் ஒன்று, அதில் நின்றபடி பயணித்தவரால் மீண்டும் டெர்மினலுக்கேதிரும்பியது. விமான பயணம் என்பது சாதாரணமாகி வரும்போது, அதில் விசித்திரங்கள் பலவும் அரங்கேறி வருகின்றன. அப்படியான விசித்திரம் ஒன்றுக்கு, இன்று காலை மும்பையிலிருந்து வாராணசிக்கு கிளம்பிய இண்டிகோ விமானம்ஆளானது. விமானம் தனது பறத்தலுக்கு முந்தைய ஓடுதள பாதை பயணத்தை எட்ட இருந்தபோது, விமானத்தின்கடைசி இருக்கையருகே பயணி ஒருவர் நின்றபடி பயணிப்பதை விமான சிப்பந்தி ஒருவர் கண்டறிந்தார். அவர் விடுத்த எச்சரிக்கையை அடுத்து, இண்டிகோ விமானம் தனது பறத்தல் முயற்சியை கைவிட்டு மீண்டும்டெர்மினலுக்கே திரும்பியது. நின்றபடி பயணித்தவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இண்டிகோ விமானசேவை நிறுவனத்தின் தவறு வெளிப்பட்டது.  விமான சேவை நிறுவனங்கள், தங்கள் பயணியர் விமானங்கள் காலி இருக்கைகளுடன் பறப்பதை தவிர்க்க சிலநேரங்களில், இருக்கைகளின் எண்ணிக்கைக்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்கும். போதிய எண்ணிக்கையில் பயணிகள் திரளாதது, கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்யும் பயணிகள் உள்ளிட்டகாரணங்களினால் பொதுவாக, இந்த கூடுதலாக விற்பனையாகும் டிக்கெட்டுகளால் பிரச்சினைகள் எழுவதில்லை. ஆனால் மும்பையிலிருந்து வாராணசிக்கு இன்று காலை கிளம்பிய இண்டிகோ விமானத்தில், அதன் இருக்கைகள்அனைத்தும் நிரம்பியிருந்தது. பயணிகளில் ஒருவர் தனக்கான இருக்கை கிடைக்காததில், விமானத்தின் கடைசிவரிசையில் நின்றபடி தத்தளித்துக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட நகரப் பேருந்து போல அந்த இண்டிகோ விமானம், நின்றபடி பயணிப்பவருடன் வானில் பறக்கஇருந்தது. விமான நிலையத்தின் டெர்மினலில் இருந்து ஓடுபாதைக்கு செல்வதற்கான ’டாக்ஸிங்’ எனப்படும் ஊர்ந்துசெல்லும் பயண நேரத்தில், கூடுதல் பயணியை விமான சிப்பந்தி கண்டுகொண்டார்.  இதனால் மீண்டும் டெர்மினலுக்கு திரும்பிய இண்டிகோ விமானம், ஒற்றைப் பயணியை இறக்கிவிட்டு, மீண்டும்ஒருமுறை வழக்கமான சரிபார்ப்பு நடைமுறைகளுக்குப் பின்னரே கிளம்பியது. இதனால் சுமார் ஒரு மணி நேரதாமதத்துக்குப் பின்னரே அந்த விமானம் வாராணசிக்கு கிளம்பியது.

National

இண்டிகோ இணையதளம் முடங்கியதால் முன்பதிவு செய்ய முடியாமல் அவதி!

இண்டிகோ விமான நிறுவனத்தின் இணையதளம் முடங்கியதால் விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதே போல ‘டிஜியாத்ரா’ டிக்கெட் புக்கிங் தளமும் செயல்படவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இண்டிகோ [more…]

National

மும்பைக்கு திருப்பிவிடப்பட்ட இண்டிகோ விமானம்!

கோவாவில் இருந்து டெல்லி சென்ற இந்த விமானம் அடர்ந்த மூடுபனி காரணமாக மும்பையில் தரையிறக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. அன்றைய தினம் டெல்லியில் தரையிறங்க விமானங்கள் திருப்பி விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவாவில் இருந்து [more…]