மோடிக்கு நிகரான தலைவர் யாரும் இல்லை” என்று காங்கிரஸ் எம்பி–யான கார்த்தி சிதம்பரம் கருத்துச் சொல்லிஇருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. “தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை எனக்குக் கொடுத்தால் கட்சியை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச்செல்வேன்” என்று கருத்துச் சொல்லி வரும் கார்த்தி சிதம்பரம், அவ்வப்போது காங்கிரஸ் தலைமையின் கருத்துக்குஎதிர்கருத்துக்களையும் சொல்லி வருகிறார். அந்த வகையில் அண்மையில் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த கார்த்தி, ”பிரதமர் மோடிக்கு நிகரானதலைவர் யாரும் நாட்டில் இல்லை” என வெளிப்படையாகச் சொல்லி இருந்தார். இது காங்கிரஸ் வட்டாரத்தில் கடும்கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. “காங்கிரஸ் எம்பி–யாக இருந்துகொண்டு கார்த்தி எப்படி இப்படிப் பேசலாம்? அமலாக்கத்துறை வழக்குகளில்இருந்து தன்னைக் காத்துக்கொள்ள நினைத்தால் பேசாமல் அவர் பாஜகவில் சேர்ந்துவிடட்டும். அதைவிடுத்து, காங்கிரஸின் அடையாளமாக இருந்துகொண்டு இப்படி மோடிக்கு துதிபாடக்கூடாது” என கொதிக்கும்காங்கிரஸ்காரர்கள், “கார்த்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரைக் கட்சியைவிட்டே நீக்க வேண்டும்” எனகோரிக்கை எழுப்பி வருகிறார்கள். அதேசமயம், மோடியை கார்த்தி புகழ்ந்து பேசியதை பாஜகவினர் இணையத்தில்வைரலாக்கி வருகிறார்கள். இதுவும் காங்கிரசாரை கடுப்பேற்றி வருகிறது. இதனிடையே, மோடியை புகழ்ந்து பேசியது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி தமிழக காங்கிரஸ்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ் அனுப்பிஇருப்பதாகச் சொல்லப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கே.ஆர்.ராமசாமி ஒரு அணியாகவும் கார்த்தி சிதம்பரம் ஒரு அணியாகவும் ரெண்டு பட்டுநிற்கும் நிலையில், ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் ஆஜராகி கார்த்தி சிதம்பரம் விளக்கம் அளிப்பாரா என்றகேள்வியும் எழுந்திருக்கிறது. ஒருவேளை அவர் விளக்கம் அளித்தால் அதை வைத்தே அவர் மீது நடவடிக்கைஎடுக்கவும் வாய்ப்பிருப்பதாக காங்கிரஸ் வட்டாரத்தில் சொல்கிறார்கள்