தமிழக அரசியல் களம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டபோது அதனை சூசகமாகத் தவிர்த்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். ஹைதராபாத்தில் இருந்து ‘வேட்டையன்’ படப்பிடிப்பு முடித்து அவர் சென்னை திரும்பிய போதுதான் இவரிடம்கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. ரஜினிகாந்த் உடன் இயக்குநர் ஞானவேல் ‘வேட்டையன்’ படப்பிடிப்பிற்காக சென்னை– ஹைதராபாத் என மாறி மாறி பறந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். ‘ஜெயிலர்’, ‘லால் சலாம்’ எனப் படங்களுக்குப் பிறகு அவரது ரசிகர்கள் அடுத்தப் படத்தை எதிர்பார்த்துள்ளனர். ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் கேரளா, கன்னியாகுமரி, சென்னை, ஹைதராபாத் ஆகியஇடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இருந்து ’வேட்டையன்’ படப்பிடிப்பிற்காககடந்த 9ம் தேதி ஹைதராபாத் புறப்பட்டு சென்றிருந்த ரஜினிகாந்த் படப்பிடிப்பை முடித்து விட்டு இன்று சென்னைதிரும்பினார். அப்படி அவர் சென்னை திரும்பும்போதெல்லாம் விமான நிலையத்தில் கேள்வி கேட்பது வழக்கம். அரசியல் களம்பரபரப்பாகி இருக்கும் இந்த சமயத்தில் அவரிடம் தமிழக அரசியல் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. சமீப காலமாகதிமுக அரசிடம் அதிகம் நெருக்கம் காட்டி வரும் ரஜினிகாந்த், இந்தக் கேள்வியை முடிக்கும் முன்னரே, ’அரசியல்கேள்விகள் வேண்டாம். பதில் சொல்ல மாட்டேன்’ என சிரித்துக் சமீபத்தில் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்டபோது, அதற்கு ஆதரவு தெரிவித்து ரஜினிகாந்த் நான்கு வருடங்களுக்கு முன்பு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில்வைரலானது குறிப்பிடத்தக்கது. அதனால், அது தொடர்பான கேள்விகள் வருமோ என நினைத்து அரசியல்தொடர்பான கேள்விகளை ரஜினி சூசகமாகத் தவிர்த்து இருப்பதாக ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்