சுத்தமாக இருக்கும் கோயில்களை சுத்தம் செய்யும் விந்தை பாஜகவில்தான் உள்ளது என்று தமிழக இந்து சமயஅறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சுத்தமாக இருக்கும் கோயில்களை விளம்பரத்துக்காகசுத்தம் செய்துள்ளார் அண்ணாமலை என்று அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அயோத்தி ராமர் கோயில் கருவறையில் குழந்தை ராமர் சிலையைபிரதமர் மோடி பிரதிஷ்டை செய்யவுள்ளார். ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் கோயில்களில் பாஜகவினர் தூய்மை பணிமேற்கொண்டு வருகின்றனர். மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள காலாராம் கோயிலின் வளாகத்தை பிரதமர் மோடிசுத்தம் செய்தார். அதேபோல தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் தனது மனைவியுடன் தூய்மை பணியில் ஈடுபட்டுவருகிறார். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன்சுவாமிகள் கோயிலில் குப்பைகளை கூட்டி சுத்தம் செய்து கோயிலை அண்ணாமலை கழுவினர். இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு கூறியிருப்பதாவது, “ சுத்தமாக இருக்கும் கோயில்களை மீடியாபோக்கஸ்–க்காக சுத்தம் செய்துள்ளார் அண்ணாமலை. பாஜகவினரை போல ஆளுநரும் ஒருபுறம் பக்கெட் எடுத்துக்கொண்டு சுத்தம் செய்துள்ளார். தமிழ்நாட்டில் கோயில்கள் அனைத்தும் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. சுத்தமாக இருக்கும் கோயில்களை சுத்தம் செய்யும் வித்தை பாஜகவில்தான் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதற்காக ஆளுநர் துணைக்குப் போய் சுத்தம் செய்கிறேன் என்று புறப்பட்டுள்ளார். ஏற்கெனவே கோயில்கள்அனைத்தும் சுத்தமாகவே இருக்கிறது. அதனை சுத்தம் செய்கிறேன் என இவர்கள் புறப்பட்டுள்ளனர்” என்றுதெரிவித்துள்ளார்.