Tamil Nadu

தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு மழை

சென்னை: மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில், அடுத்த 6 [more…]

WEATHER

தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் செப். 5-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் [more…]

WEATHER

நாளை தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு !

சென்னை: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை [more…]

WEATHER

மே 6 வரை வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை நீடிக்கும்

சென்னை: மே 6-ஆம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் [more…]

WEATHER

வானிலை நிலவரம் !

தமிழகத்தில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் [more…]

Tamil Nadu WEATHER

2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம்!

தென் தமிழகத்தில் ஜனவரி 18 மற்றும் 19-ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி [more…]

Tamil Nadu WEATHER

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கடும் பனிமூட்டம் நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்!

0 comments

தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதிகாலை வேலைகளில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளதாகசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை முழுமையாக நீங்கி இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில்மழை முற்றிலுமாக குறைந்து வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்தநிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை ஆய்வு மையத்தின் வானிலை ஆய்வுக்கான செய்தி குறிப்புவெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில்அதிகாலை வேலைகளில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் வருகிற 17ம் தேதி வரைஇதே நிலை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தென் தமிழகமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரிமற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக பயணிக்க அறிவுறுத்தல் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஓரிருஇடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 செல்சியஸ்ஒட்டியும் இருக்கக் கூடும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதிகாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

National WEATHER

டெல்லியில் இதுவரை இல்லாத குளிர் – குறைந்தபட்ச வெப்பநிலை 3.9 டிகிரி!

டெல்லியில் இந்த ஆண்டு குளிர்நிலை, ஏற்றத்தாழ்வுடன் இருந்து வருகிறது. சில நாட்கள் குறைந்தபட்சவெப்பநிலை 7 அல்லது 8 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும், அடுத்த சில நாட்கள் அதைவிடகுறைந்துவிடும்.  இந்த நிலையில் இன்று அதிகாலை குறைந்தபட்ச வெப்பநிலை 3.9 டிகிரியாக பதிவு ஆனது. இது டெல்லி மக்களைகுளிரில் நடு நடுங்க வைத்துவிட்டது. நள்ளிரவுக்கு பிறகு திடீரென குளிர் அதிகரித்தது பலருக்கு தூக்கத்தைதொலைத்தது.  காலை விடியும்போது எங்கு பார்த்தாலும் ஒரே பனிமூட்டமாக தெரிந்தது. இதனால் பார்வைத்திறனின் தூரம்குறைந்தது. இது போக்குவரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.  மேலும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில், ஜி.டி. ரெயில் உள்பட 23 ரெயில்கள் டெல்லிக்கு தாமதமாக வந்தன. இதேப்போல் விமான போக்குவரத்திலும் ஒரு மணிநேரம் முதல் 4 மணிநேரம் வரை தாமதம் ஆனது. நகரில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 18.1 டிகிரியாக இருந்தது.

WEATHER

மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை !

கேரள கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு [more…]

Tamil Nadu WEATHER

தொடர்ந்து தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை!

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாகி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர்பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன் கூறியதாவது : கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழைபெய்துள்ளது. 5 இடங்களில் அதிகனமழையும்,17 இடங்களில் மிக கனமழையும்,55 இடங்களில் கன மழை பதிவாகியுள்ளது. சீர்காழியில் அதிக பட்சமாக 24 சென்டிமீட்டர் அதிக அளவு மழை பதிவாகியுள்ளது. கனமழை எச்சரிக்கை பொருத்தவரையில் திருவாரூர் ,மயிலாடுதுறை நாகப்பட்டினம், கடலூர் விழுப்புரம், திருவண்ணாமலை செங்கல்பட்டு புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும். தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, தஞ்சை, கள்ளக்குறிச்சி சேலம் வேலூர் ராணிப்பேட்டை காஞ்சிபுரம்திருவள்ளூர் சென்னை ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் (Scaring Rain) கனமழை பெய்யும். அடுத்த மூன்று தினங்களுக்கு தமிழக கடற்கரை பகுதிகள் மன்னார் வளைகுடா குமரி கடல் பகுதியில் பலத்த காற்றுமணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும் எனபதால் மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன் பிடிக்கச்செல்ல வேண்டாம் தென்மாவட்டங்களில் குறிப்பாக குமரி கடல் பகுதியில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக 11 12 தேதிகளில் அந்த பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு உள்ளது. இன்றைய தினத்தை பொருத்தவரையில் சென்னை மற்றும் வட மாவட்டங்களில் மழை பெய்யும் . வட உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஜனவரி மாதம் மழை அளவீடுகளாக தெரிவிக்க வேண்டும் என்றால் நாகப்பட்டினத்தில் 205 மில்லி மீட்டர் மழைபதிவாகியுள்ளது. ஏற்கனவே 245 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ளது. கடலூரைப் பொருத்தவரையில் ஏற்கனவே 197 மில்லி மீட்டர் 153 மில்லி மீட்டர் மழை என்பது அதிகபட்சமாகபதிவாகி இருக்கும் நிலையில் தற்போது 106 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில் கடந்த மூன்று மாதத்தில், இந்த ஆண்டு 455 மில்லி மீட்டர்பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு 445 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு நான்கு சதவீதம் அதிகமாகவும் கடந்த ஆண்டு ஒரு சதவீதம் அதிகமாகவும் மழை பெய்துள்ளது. குளிர்காலத்தை பொறுத்தவரையில் இந்த எட்டு தினங்களில் 28.7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது எனபாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.