மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை… மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்!

Spread the love

மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், தமிழக மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்படுகிறது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மாநில அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. இருப்பினும், மீனவர்கள் பிரச்சனைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. மறுபக்கம், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல், கைது என தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதற்கு அரசியல் தலைவர்கள் குரல் எழுப்பி, இலங்கை கடற்படைக்கு செயலுக்கு கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், சமீபத்தில் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்கள் மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கடந்த 23ம் தேதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை விரைவில் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீன் இறங்குதளத்திலிருந்து, 1-10-2023 அன்று, IND-TN-12-MM-6376 பதிவு எண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள், 23.10.2023 அன்று தினாது தீவு அருகே மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம், மாலத்தீவு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட வேண்டுமென்று முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours