திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு டிசம்பர் 17ம் தேதி சேலத்தில் பிரம்மாண்டமாக நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது .
திமுக இளைஞரணி 2வது மாநில மாநாட்டிற்காக ஆயத்தமாகி வரும் நிலையில், தற்போது தேதி மற்றும் இடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 16 ஆண்டுகளுக்குப் பிறகு சேலத்தில் திமுக இளைஞரணி மாநில மாநாடு நடைபெறும் என தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
கடந்த 2007ஆம் ஆண்டு டிசம்பர் 15 அன்று கழக வரலாற்றில் முத்திரைப் பதித்து, திருப்புமுனை ஏற்படுத்திய தி.மு.க. இளைஞர் அணி முதல் மாநில மாநாட்டினை தொடர்ந்து, வருகிற 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ‘தி.மு.க. இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு’ சேலத்தில் நடைபெறும் என தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours