திமுக எம்பிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு !

Spread the love

முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி எம்பியுமான ஜெகத்ரட்சகன் கடந்த 1995ல் 170 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக புகார் எழுந்தது. அரசு கையகப்படுத்த வேண்டிய நிலத்தை முறைகேடான ஆவணங்களை தயாரித்து 170 ஏக்கர் நிலத்தை அபகரித்து, அதனை வீட்டு மனைகளாக விற்பனை செய்து 1700 கோடி ரூபாய் அளவிற்கு லாபம் ஈட்டியதாக ஜெகத்ரட்சகன் மீது புகார் அளிக்கப்பட்டது.

அதாவது, சென்னை குரோம்பேட்டையில் இயங்கி வந்த குரோம் லெதர் தொழிற்சாலை என்ற நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை 1982ல் நில நகர்ப்புற நில உச்சவரம்பு திட்டத்தின் கீழ் தமிழக அரசு எடுத்திருந்தது. இதன் பின் திமுக எம்பியான ஜெகத்ரட்சகன் கடந்த 1995-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் பங்குகளை தனது அதிகாரத்தின் மூலமாக முறைகேடாக வாங்கியதாகவும், அதேபோல சுமார் 170 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்களை தயாரித்து அபகரித்ததாக டாவ்சன் என்பவர் வழக்கு தொடுத்தார்.

இந்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ஜெகத்ரட்சகன் தாக்கல் மனுவை ஏற்றுக்கொண்டு, அவர் மீதான அனைத்து வழக்குகளையும் வழக்கை ரத்து செய்து கடந்த நவம்பர் மாதம் 2022 ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நில அபகரிப்பு வழக்கை கடந்த ஆண்டு ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டாவ்சான் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டாவ்சான் என்பவரது புகாரின் பேரில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியிருந்தனர்.

இந்த சமயத்தில் ஜெகத்ரட்சகன் மீதான வழக்கை ரத்து செய்ததால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உடனடியாக உச்சநீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours