ஒவ்வொரு குறிப்பிட்ட மாத இடைவெளியிலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ஏதேனும் ஒரு மாவட்டத்திற்கு நேரடியாக சென்று அதன் அருகில் உள்ள மற்ற மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துவார். அப்போது அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள், அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து கொள்வார்.
மேலும், திட்டத்தின் செயல்பாடு தாமதமாக இருந்தால் அதற்கான காரணத்தையும் தெரிந்துகொண்டு அதனை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்வார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இவ்வாறு முதல்வரின் கள ஆய்வு திட்டம் செயல்பட்டு வருகிறது.
அதன்படி அடுத்ததாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். வரும் செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய 2 தேதிகளில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் மேற்கண்ட மாவட்டங்களின் ஆட்சியாளர்கள், மாவட்ட எஸ்பிக்கள் மற்ற உயர் அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்ட ஒழுங்கு, அரசின் திட்ட செயல்படுங்கள் ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்க உள்ளனர்.
+ There are no comments
Add yours