400 ஆண்டுகள் பழமையான புனித ஜார்ஜ் கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றுவதில் பெருமை அடைகிறேன்.
கலைஞர் நூற்றாண்டில் கோட்டையில் கொடி ஏற்றுவதை பெருமையாக கருதுகிறேன் என கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் ₹10,000-ல் இருந்து ₹11,000ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடுதான் விடுதலை போராட்டத்திற்கான விதையை முதலில் விதைத்தது எனவும் நடப்பாண்டு பல்வேறு துறைகளை சேர்ந்த 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம் எனவும் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும், அவ்வாறு செய்தால்தான் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறையை அகற்ற முடியும் எனவும் கூறியுள்ளார்.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours