இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் !

Spread the love

கோவை அடுத்த சூலூரில் மத்திய பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் ஈடுபட்டதை அடுத்து 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை என கூறியும், வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை என்றும் மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 12ம் தேதி முதல் 3 நாட்கள் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்திருந்தனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சூலூரில் உள்ள திருச்சி சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் இன்று திரண்டனர். பின்னர் ஊர்வலமாக சென்று கலங்கல் சாலை சந்திப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து அவர்கள் திருச்சி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட முயன்ற 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் மறியல் போராட்டம் காரணமாக திருச்சி சாலையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours