விளக்கமளித்தால் ஆஜராவேன்; போலீஸாருக்கு சீமான் எழுதிய கடிதம்!

Spread the love

நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் வழக்கில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் வழக்கில் நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறைப் பிரிவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சங்கர் மற்றும் ஸ்ரீதர் உட்பட நான்கு பேர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி ராஜலட்சுமி முன்பு இன்று ஆஜராகினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர்கள், சீமான் இன்று காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை என தெரிவித்தனர்.

நடிகை புகாரில் 2011ல் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆனால் இன்று சில காரணங்களால் அவர் ஆஜராகவில்லை என்பதற்கான காரணத்தை காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளோம் என்று கூறினர்.

அதே வேளையில், சீமான் கொடுத்து அனுப்பிய இரண்டு கடிதங்கள் விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், 2011ல் பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடிகை விஜயலட்சுமி அப்போதே மேல் நடவடிக்கை வேண்டாம் என எழுதி கொடுத்து வழக்கை வாபஸ் பெற்ற கடிதத்தின் நகலும் அதன் அடிப்படையில் சீமான் எழுதிய மற்றொரு கடிதமும் காவல்துறையினரிடம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.

சீமான் கொடுத்துள்ள அந்த கடிதத்தில், குற்றம் நடந்ததாக கூறப்பட்ட காலக்கட்டம் 2008 எனவும், வழக்கை அவர் வாபஸ் பெறுவதாக கூறிய பிறகு சுமார் 15 ஆண்டுகள் கழித்து அதில் ஏன் மீண்டும் விசாரணை நடத்தப்படுகிறது என்றும் மேலும் முடித்து வைக்கப்பட்ட அந்த வழக்கில் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டதா? அல்லது புதிய சட்டப்பிரிவுகள் எதுவும் சேர்க்கப்பட்டுள்ளதா? அதுமட்டுமின்றி முடித்து வைக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டதா? என அந்த கடிதத்தில் விளக்கம் கேட்டுள்ளதாகவும், இவற்றிற்கு உரிய விளக்கம் கொடுத்தால் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பேன் என சீமான் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours