ட்ரோல் செய்த நெட்டிசன்கள்… விளக்கமளித்த ரஜினிகாந்த் !

Spread the love

ஜெயிலர் திரைப்படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பாகவே நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்த சுற்றுப்பயணத்தில் ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி இடங்களுக்கு சென்ற ரஜினிகாந்த் . ஆகஸ்ட் 19 அன்று ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங் தலைமையகம் சென்று சன்னியாசிகளை சந்தித்தார்.

உத்தர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சரான யோகி ஆதித்யநாத்தை சந்தித்த ரஜினிகாந்த் தீடிரென அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார் . யோகி ஆதித்யநாத் காலில் நடிகர் ரஜினிகாந்த விழுந்த வீடியோ இணையத்தில் செம வைரல் ஆக நெட்டிசன்கள் ரஜினியை தாறுமாறாக ட்ரோல் செய்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ள நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது :

“என்னை விட வயதில் குறைவாக இருந்தாலும் சந்நியாசி காலில் விழுவது என் வழக்கம். அதைத்தான் நான் செய்தேன்” என புன்னகையுடன் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours