2011-2021 வரையிலான 10 ஆண்டுகால ஆட்சியைப் பொற்காலம் என மக்கள் கொண்டாடினர். காவிரி நீர் பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைப் பெற்ற அரசாங்கம் அதிமுக அரசு-மதுரை மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
மதுரை மண்ணில் எதை தொடங்கினாலும் வெற்றி தான். தொடங்கிய ஆறே மாதத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சி என்றால் அதிமுக தான். எந்த கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது. தொண்டனாக இருந்து உழைப்பால் இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறந்தோம்; ஏராளமான கலை, அறிவியல், சட்டக் கல்லூரிகளை திறந்தோம். திமுக அரசு நீட் விவகாரத்தில் நாடகம் போடுகிறது, 2 ஆண்டில் நீட் விலக்கு பெற என்ன செய்தீர்கள். டாஸ்மாக்கில் ஏழை எளியோர் மதுவாங்கினால் ரூ.10 அதிகம் கேட்கிறார்கள், ஒரு கோடி மது விற்கிறது என – எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தினமும் ரூ.10 கோடி லாபம், முறைகேடான பார் மூலம் கிடைக்கும் வருவாய் ஸ்டாலினுக்கு போகிறது. ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர் கம்பி எண்ணுகிறார், அதிமுகவினருக்கு எதிரான வழக்கை சட்டப்போராட்டம் நடத்தி வெல்வோம். தொண்டராக இருப்பவர் அதிமுக கிளைச் செயலாளர் ஆகலாம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
15 லட்சம் தொண்டர்கள் பங்கேற்ற இந்த மாநாடு சரித்திர சாதனை படைத்துள்ளது. இதுவரை எந்த மாநாட்டுக்கும் இவ்வளவு பேர் வந்தது கிடையாது. அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டின் சரித்திர சாதனை படைத்து இருக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours