’’பாரத்’ உட்பட எதுவாக இருந்தாலும் பரவாயில்லை’ என்னை பொறுத்த வரை ’இந்தியா’ தான் பிடிக்கும்’ என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு,
‘’அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார், கட்சி பணிகளை முழுமையாக செய்யச் சொல்லியுள்ளார்; அம்மா மற்றும் எம்ஜிஆர் வழியில் மாநாடு சிறப்பாக நடத்தியற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்’’ என்றார். பாரத் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜு, பிரதமரே இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். பின்பு ஏன் அதுகுறித்து பேச வேண்டும். என்னைப் பொறுத்தவரை எனக்கு ’இந்தியா’ தான் பிடிக்கும் என்றார்.
+ There are no comments
Add yours