பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஊடகம் தம்மை பற்றி பேச வேண்டும் என்பதற்காக விளம்பர அரசியலுக்கு ஆளாகி உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.
நாங்குநேரி சம்பவம் மிகுந்த வேதனையளிப்பதாகவும், பள்ளி சிறுவர்கள், கல்லுரி மாணவர்கள், அனைவரும் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், சிலர் மாணவர்களுக்கு சாதி, மதம் குறித்த கருத்துகளை பரப்பி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து, இந்தியா கூட்டணி அமைந்ததில் இருந்து பாஜகவினருக்கு அடி வயிற்றில் புளி கரைகிறது எனவும் பிரதமர் பயந்து போய் இருக்கிறார் எனவும் பாஜகவை விமர்சித்த அவர் எதிர் கட்சிகள் ஒன்று சேரும் என கனவில கூட நினைத்து இருக்க மாட்டார் எனக் கூறினார்.
மேலும் அதற்கு வாய்ப்பு இல்லை என்ற எண்ணத்தோடு இருந்தவருக்கு அனைத்து ஏதிர் கட்சியும் சேர்ந்து இந்தியா என்ற கூட்டணி அமைத்தது காலத்தின் தேவையாக இருக்கிறது எனவும் இந்த கூட்டணி உருவான நாளில் இருந்து பாஜக, ஆர்எஸ்எஸ் பிதற்றி கொண்டு இருக்கிறார்கள் எனவும் விமர்சித்துள்ளார்.
அண்ணாமலையின் நடைபயணம் குறித்து பேசிய தொல்.திருமாவளவன் அண்ணாமலை ஊடகம் நம் பக்கம் இருக்க வேண்டும் என பேசி கொண்டு இருக்கிறார் எனவும் தம்மை பற்றி பேச வேண்டும் என்ற விளம்பர உளயவியலுக்கு ஆளாகி உள்ளார் எனவும் அது ஒரு மேனியா என்று தான் சொல்ல வேண்டும் எனக் கூறிய அவர் இந்த நடைபயணம் எந்த தாகத்தையும் ஏற்படுத்தாது என்றும் தெரிவித்தார்.
+ There are no comments
Add yours