முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரைக்கு சென்று பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்திரராஜன் சிலையை திறந்து வைக்கிறார். முதல்வர் ஸ்டாலின் நாளையும் நாளை மறுநாளும் ராமநாதபுரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் மதுரை முனிச்சாலைக்கு சென்று அங்கு மாநகராட்சிக்கு சொந்தமான கட்டட வளாகத்தில் நிறுவப்பட்ட பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்திரராஜனின் உருவச் சிலையை திறந்து வைக்கிறார். இந்த விழாவைத் தொடர்ந்து ரிங்ரோடு பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கிய பின்னர், நாளை காலை 10 மணி அளவில் கார் மூலம் ராமநாதபுரம் புறப்படுகிறார்.
தொடர்ந்து மதியம் 1 மணிக்கு ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பயணியர் தங்கும் விடுதிக்கு வரும் முதல்வர் ல்டாலின், மாலை 4 மணிக்கு ராமநாதபுரம் அருகே பேராவூர் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நடைபெறும் தென் மண்டல அளவிலான திமுக வாக்குச் சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மண்டபம் கலோனியர் பங்களா அருகில் நடக்கும் மீனவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதல்வர் கலந்து கொள்ளும் விழாவுக்காக ராமநாதபுரம் அருகே பேராவூர் கடற்கரை சாலை பகுதியில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.
வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் அங்கு அவரை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக திமுக சார்பில் வாக்குச் சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நடத்தப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.
+ There are no comments
Add yours