POLITICS Tamil Nadu

விஜயகாந்த் உயிருடன் இருந்தபோதே கவுரவிக்கப்பட்டிருக்க வேண்டும் – பிரேமலதா!

0 comments

நடிகர் விஜயகாந்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பத்ம பூஷண் விருதினை தமிழக மக்களுக்கும், கட்சிதொண்டர்களுக்கும் சமர்ப்பிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கலை, அறிவியல், பண்பாடு, சமூக சேவை என பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்தவர்களுக்கு இந்திய அரசுசார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்திற்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இது அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, விஜயகாந்த் நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று அவரது நினைவிடத்திற்கு வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அங்குஅஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜயகாந்த் அவர்களுக்கு பதம் பூஷண் விருதுஅறிவிக்கப்பட்டதற்கு மத்திய அரசிற்கு நன்றி தெரிவித்தார். ஆனால், இந்த விருது விஜயகாந்த் உயிருடன் இருந்தபோதே வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றுகூறினார். மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விருதை ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும், தேமுதிக கட்சிதொண்டர்களுக்கும் சமர்ப்பிப்பதாக பிரேமலதா தெரிவித்தார். விஜயகாந்த் கொடுத்த அன்பு, அவருக்கு பலமடங்காக திரும்ப கிடைத்ததாகவும், அந்த அன்பு உள்ளங்களுக்கும்இந்த விருதை சமர்ப்பிப்பதாக அவர் கூறினார்.

Cinema

மறைந்த நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது!

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு இந்திய அரசு பத்ம விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் முதலிய பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. [more…]

Cinema

விஜயகாந்த் நினைவுகளை பகிர்ந்துகொண்ட மகன்கள் !

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் உரையாற்றும் போது அவரது மகன் விஜய பிரபாகரன் அழுகையை கட்டுப்படுத்த மேடையில் ஏங்கி ஏங்கி அழுதது காண்பவர்களின் நெஞ்சை கரைய வைத்தது. அப்போது நிகழ்ச்சியில் கலந்து [more…]

Cinema

நடிகர் சங்கக் கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயரைச் சூட்ட வேண்டும் – ஆர்.கே.செல்வமணி!

நடிகர் சங்கக் கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயரைச் சூட்ட வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வலியுறுத்தினார். தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம்தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடல் அரசுமரியாதையுடன் [more…]

Cinema

விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஷால், ஆர்யா!

நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் தேதி காலமானார். விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளாத பல திரைப் பிரபலங்கள் தேமுதிக அலுவலகத்தில் உள்ள நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். [more…]

Cinema

வாழ்ந்தால் இவரைப்போல வாழ வேண்டும்… நடிகர் சூரி !

நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் தேதி காலமானார். விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளாத பல திரைப் பிரபலங்கள் தேமுதிக அலுவலகத்தில் உள்ள நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். [more…]

Cinema

நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயர், எனக்கும் சந்தோசம் – நடிகர் ஜெயம் ரவி!

நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயர் வைப்பது எனக்கும் சந்தோசம் தான் அதுநான் நியாயமான ஒன்று நடிகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் நடிகர்கள் சேர்ந்து அதைப் பற்றிய முடிவு விரைவில் எடுக்கப்படும் கடந்த டிசம்பர் [more…]

National Tamil Nadu

நினைவேந்தல் கட்டுரை எழுதிய பிரதமருக்கு பிரேமலதா நன்றி!

சென்னை: விஜயகாந்த் மறைவையொட்டி நினைவேந்தல் கட்டுரை எழுதியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நன்றி தெரிவித்துள் ளார். இது தொடர்பாக பிரதமருக்கு பிரேமலதா அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக மக்கள் மனதில் [more…]

Tamil Nadu

நடிகர் விஜய் மீது காலணி வீச்சு… புகார் !

நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி கோயம்பேடு போலீஸாரிடம் விஜய் மக்கள் இயக்கம் புகார் அளித்துள்ளது. புகாரில்..: இது தொடர்பாக அதன் தென் சென்னை மாவட்ட தலைவர் [more…]

Tamil Nadu

கேப்டன் நம்முடன் இல்லை என்பது பெரிய வருத்தம்… நடிகர் கார்த்தி !

கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு வரமுடியாதது என் வாழ்நாள் முழுக்க ஒரு பெரிய குறையாகவே இருக்கும் என்று கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நேரில் அஞ்சலி செலுத்திய பின் நடிகர் கார்த்தி கண்கலங்கியபடி பேசினார். நடிகரும் [more…]