Tamil Nadu

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் துவங்கினார் சசிகலா.

தென்காசி: தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களையும், மக்களையும் சந்திக்க உள்ளதாக சசிகலா தெரிவித்திருந்தார். அதன்படி, தென்காசி மாவட்டத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணத்துக்கு திட்டமிட்டுள்ள அவர் நேற்று காசிமேஜர்புரத்தில் பயணத்தை தொடங்கினார். பொதுமக்கள் மத்தியில் [more…]

Tamil Nadu

ஜானகி போல் சசிகலா செயல்பட வேண்டும்- எடப்பாடி அறிவுறுத்தல் !

கட்சியில் மீண்டும் சேர ஜானகி போல் சசிகலாவும் செயல்பட வேண்டும் எனவும், அண்ணாமலை வந்த பின்னர் பாஜக வளர்ந்துள்ளது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி வருவதாகவும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சென்னை [more…]

Tamil Nadu

அதிமுகவில் சசிகலாவிற்கு என்ட்ரியே கிடையாது.. ஜெயகுமார் திட்டவட்டம் !

சென்னை: அதிமுகவில் சசிகலா மீண்டும் ‘என்ட்ரி’ கொடுக்க முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் [more…]

Tamil Nadu

கட்சியில் குழப்பம் ஏற்படுத்த முயல்கிறார்கள். அதிமுகவின் வாக்கு சதவீதம் கடந்த தேர்தலை விட அதிகரித்திருக்கிறது. – எடப்பாடி பழனிசாமி விளக்கம்.

சேலம்: “ஒரு கட்சி தோல்வி அடைந்தால், மீண்டும் தோல்வி அடையும் என்பதில்லை. திட்டமிட்டு பொய்யான தகவல்களை தெரிவிக்கின்றனர். சசிகலா, ஓபிஎஸ் பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர்ந்து கட்சியை வழி நடத்தலாம் என்பது முடிந்து போன [more…]

Tamil Nadu

தமிழகத்தின் நலனுக்காக அதிமுக ஒன்றிணைவது அவசியம்: சசிகலா உருக்கம் !

அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் கட்சியின் நலன் கருதியும், தமிழக மக்களின் நலன் கருதியும் ஒற்றுமையோடு இணைந்து பணியாற்ற அனைவரும் வர வேண்டும். அதிமுக அழிவதை இனியும் என்னால் வேடிக்கை பார்க்கமுடியாது [more…]

POLITICS

சவுக்கு சங்கர் கைது – சசிகலா கண்டனம்!

பத்திரிகையாளர்களை அச்சுறுத்தி தங்கள் தவறுகளை மறைக்க பார்க்கிறது என்று தமிழ்நாடு அரசு மீது வி.கே.சசிகலா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,” சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யூடியூப் [more…]

Cinema

சசிகலா புதிதாக கட்டிய வீட்டிற்கு நேரில் சென்ற ரஜினிகாந்த்!

0 comments

சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா இல்லம் என்ற பெயரில் சசிகலா புதிதாக வீடு கட்டியுள்ளார். கிரகப்பிரவேசம் முடிந்த நிலையில், இன்று சசிகலா வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ்கார்டனில் உள்ள வேதா நிலைய இல்லத்தில் வசித்துவந்தார். ஜெயலலிதாவுடன் அவரது தோழி சசிகலாவும் போயஸ் கார்டன் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு ஜெயலலிதா மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 2017 ஆம் ஆண்டு பரப்பன அக்ரஹார சிறையில் இவர்கள் மூவரும் அடைக்கப்பட்டனர். இதையடுத்து 2020 ஆம் ஆண்டு சசிகலா சிறையிலிருந்து விடுதலை ஆனார். அப்போது முதல் அதிமுகவைகைப்பற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அதிமுகவில் அனைவரையும் ஒருங்கிணைப்பேன் என்று சசிகலா கூறிவருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடுஎஸ்டேட்டிற்கு சசிகலா சென்றார். அங்கு ஜெயலலிதாவின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அங்குகட்டப்படும் நினைவிடத்திற்கும் அவர் அடிக்கல் நட்டியிருந்தார். இதற்கிடையே, சென்னையில் போயஸ் கார்டனில்வேதா நிலைய இல்லத்திற்கு எதிரே சசிகலா வீடு கட்டி குடியேற திட்டமிட்டார்.

POLITICS Tamil Nadu

அண்ணா நினைவிடத்தில் சசிகலா, பன்னீர்செல்வம் சந்திப்பு!

0 comments

சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த சசிகலாவும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்துக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, திமுகவை வீழ்த்த எல்லா வேலைகளையும் செய்வேன் என்று தெரிவித்தார். முன்னாள் முதல்வர் [more…]

Tamil Nadu

கொடநாடு சென்ற சசிகலா !

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா முதல் முறையாக நீலகிரி மாவட்டத்திலுள்ள கொடநாடு எஸ்டேட் பங்களாவிற்கு இன்று வருகை தந்தார். அவருக்கு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் [more…]

POLITICS Tamil Nadu

அதிமுகவின் மறைந்த இருபெரும் தலைவர்களுக்கு உண்மையாக இருக்க முயலுங்கள் – வி.கே.சசிகலா!

திமுகவை வீழ்த்த அதிமுக ஒன்றுபட வேண்டும். பிரிந்து கிடந்த அதிமுக முன்பு எப்படி ஒன்றாகி பலம் பெற்றதோ, அதேபோல் தற்போது பிரிந்து கிடக்கும்அதிமுகவையும் விரைவில் நான் ஒன்று சேர்ப்பேன். நீ பெரியவனா? நான் பெரியவனா? என போட்டி போட்டுக்கொண்டு தொண்டர்களையும், கட்சியையும்மறந்துவிட்டதாக தொண்டர்கள் எண்ணுகிறார்கள். கட்சி பிளவுபட்டிருப்பதால், அதிமுக தொண்டர்கள் எல்லோரும் வருத்தத்தில் உள்ளனர். செவுடன் காதில் ஊதியசங்கு போல தொடர்ந்து போக முடியாது. பிறகு தொண்டர்கள் கொதித்தெழுவார்கள். எல்லோரும் ஒன்று சேர்வதே நம் தலைவர்களுக்கும், மக்களுக்கும் நாம் செலுத்தும் பெரிய நன்றிக்கடன்