CRIME

மாடியில் நின்று செல்போன் பேசிய திருப்பூர் வடமாநில தொழிலாளி தவறி விழுந்து பலி.

திருப்பூர்: செல்போனில் பேசியபடி மூன்றாவது மாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்த வடமாநில தொழிலாளி உயிரிழந்தார். அப்போது அவரைக் காப்பாற்ற முயன்ற நண்பர் படுகாயம் அடைந்தார். ஈரோட்டைச் சேர்ந்தவர் உலகநாதன். இவருக்கு திருப்பூர் பாண்டியன்நகர் [more…]

Special Story

தெரு நாய்களுக்கு கருத்தடை – திருப்பூர் மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர் அறிவிப்பு.

திருப்பூர்: ‘தெரு நாய்களுக்குக் கருத்தடை செய்து, அவற்றின் பெருக்கத்தைக் குறைத்து, மக்களைப் பாதுகாத்திட வேண்டும். விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், தெரு நாய்களைப் பிடித்து, திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும்’ என்று மார்க்சிஸ்ட் [more…]

Special Story

திருப்பூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இருவர் ரயில் மோதி பலி !

திருப்பூர்: திருப்பூரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கட்டிடத் தொழிலாளர்கள் இருவர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். ரயில்வே போலீஸார் உடல்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் காவிலிபாளையம்புதூர் பகுதியில் கட்டிடப் பணி செய்வதற்காக [more…]

Tamil Nadu

திருப்பூருக்கு கடத்தி வரப்பட்ட 400 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் !

ஈரோடு: கர்நாடகாவில் இருந்து திருப்பூருக்கு ரூ.3.21 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த ராஜஸ்தான் நபரை போலீஸார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சேலம் – கோவை தேசிய [more…]

Tamil Nadu

நாற்பதாயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு.. திருப்பூர் மாநகராட்சி தகவல் !

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் 4-வது குடிநீர் திட்டத்தின் மூலம் 40 ஆயிரம் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்தார். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பனியன் [more…]

Tamil Nadu

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட காவல் ஆய்வாளர்!

0 comments

திருப்பூரில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்தில், உடனடி நடவடிக்கைமேற்கொள்ளாத காவல்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுஉள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு நேற்றுஅடையாளம் தெரியாத நபர்களால் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டார். இதில் நெஞ்சு, கைகளில் படுகாயம் அடைந்து தற்போது கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சை முடிந்து தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபு அடையாளம் தெரியாதநபர்களால் தாக்கப்பட்ட செய்தி அறிந்து மிகவும் வருந்தினார். ஊடக செய்தியாளர் மீதான இந்த தாக்குதல் நிகழ்ச்சிமிகவும் கண்டனத்திற்குரியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “சம்பவம் நடப்பதற்கு முன்பாக செய்தியாளர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரியதின் மீது உரியநடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர், உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கஉத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதனை ஒரு சிறப்பு நிகழ்வாக கருதி மருத்துவ சிகிச்சையில் உள்ளசெய்தியாளருக்கு பத்திரிகையாளர் நல வாரியத்தில் இருந்து 3 லட்சம் ரூபாய் வழங்கிடவும் முதலமைச்சர்உத்தரவிட்டுள்ளார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

National Tamil Nadu

ரத்து செய்யப்பட்ட பிரதமரின் திரூப்பூர் பயணம்!

திருப்பூரில் வரும் 19-ம் தேதி நடைபெறவிருந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருவதாகஅறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பிரதமர் மோடியின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட பாஜகதலைவர் செந்தில் வேல் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: திருப்பூரில் வரும் 19-ம் தேதி பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நடைபற உள்ளதாகவும், இதில் பிரதமர் மோடிபங்கேற்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக 6 இடங்கைளத் தேர்வு செய்யும் பணி நடைபற்றுவந்தது. இந்நிலையில், சில நிர்வாகக் காரணங்களால் பிரதமர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் பங்கேற்கஉள்ள பொதுக்கூட்டம் தொடர்பான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்

Tamil Nadu

முன்னறிவிப்பின்றி போக்குவரத்து மாற்றம்: திருப்பூர் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!

0 comments

போக்குவரத்து மாற்றத்தை ஒட்டி, திருப்பூர் புஷ்பா திரையரங்க வளைவில் நேற்று வைக்கப்பட்டிருந்த பேரிகேடு.திருப்பூர் மாநகர் போக்குவரத்தின் இதயப் பகுதியாக விளங்குவது புஷ்பா திரையரங்கு வளைவு மற்றும் ரயில் நிலையம். இந்த 2 இடங்களிலும் போக்குவரத்து [more…]