CHENNAI

சென்னையில் நெரிசலை குறைக்க மேலும் 28 மெட்ரோ ரயில்களுக்கு ஒப்புதல் !

சென்னை: மெட்ரோ ரயில்களில் நெரிசலைக் குறைக்கும் வகையில், ரூ.2,820 கோடியில் 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில்களைக் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு நிதி ஆயோக் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையில் விமான நிலையம் முதல் [more…]

Tamil Nadu

தூத்துக்குடி சுங்கசாவடியை முற்றுகையிட்ட லாரி உரிமையாளர்கள் – கடும் போக்குவரத்து பாதிப்பு !

தூத்துக்குடி அருகே சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நடத்திய திடீர் போராட்டத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், புதூர் பாண்டியாபுரத்தில் சுங்கச்சாவடி உள்ளது. தேசிய நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இந்த [more…]

Tamil Nadu

தமிழகம் முழுவதும் வாகன தணிக்கை நடத்த திட்டம்!

சென்னை: விதியை மீறி வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டியவர்களுக்கு சென்னையில் போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்தனர். தமிழகம் முழுவதும் இதுபோல வாகன தணிக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பலர் தங்கள் வாகனங்களில் ஊடகம், போலீஸ், [more…]

CHENNAI

விதிகளை மீறியதாக ஐஏஎஸ் அதிகாரி மனைவிக்கு அபராதம், 2 போலீஸார் சஸ்பெண்ட்!

0 comments

போக்குவரத்து விதிகளை மீறியதாக ஐஏஎஸ் அதிகாரி மனைவிக்கு அபராதம் விதிக்கப்பட்ட விவகாரத்தில், எல்லை தாண்டி வழக்குப் பதிவு செய்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் உட்பட இருவரை பணியிடை நீக்கம் செய்து இணை ஆணையர் உத்தரவு [more…]

Tamil Nadu

ஹெல்மெட் அணியாத காவலர்களுக்கு நூதன தண்டனை !

காரைக்காலில் ஹெல்மெட் அணியாமல் சென்ற இரு காவலர்கள், இருசக்கர வாகனஓட்டிகளுக்கு ரோஜா பூ வழங்குமாறு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நூதன தண்டனை வழங்கினார். காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மணீஷ் நேற்று முன்தினம் [more…]

CHENNAI

சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!

சென்னை ரன்னர்ஸ் சார்பில் 4 பிரிவுகளாக (42.195 கி.மீ, 32.186 கி.மீ, 21.097 கி.மீ மற்றும் 10 கி.மீ) ‘சென்னைமாரத்தான்’ என்ற பெயரில் மாரத்தான் ஓட்டம் நாளை (06.01.2024) காலை 04.00 மணி முதல் நடைபெறுகிறது.  இந்த மாரத்தான் ஓட்டம் சென்னை நேப்பியர் பாலம் மற்றும் பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியிலிருந்துஆரம்பிக்கப்பட்டு காமராஜர் சாலை, சாந்தோம் ஹை ரோடு, டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சாலை, சர்தார் படேல்சாலை, ஓ.எம்.ஆர்., கே.கே. சாலை, இ.சி.ஆர் வழியாக இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தைச் சென்றடையும்வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு, சென்னையில் போக்குவரத்து மாற்றம்செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  ‘அடையார் மார்க்கத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.க. பாலம், டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன்சாலை, சாந்தோம் ஹை ரோடு, காமராஜர் சாலை மற்றும் உழைப்பாளர் சிலை வரை வழக்கம் போல் எந்தவிதமாற்றமும் இல்லாமல் செல்லலாம். போர் நினைவிடத்திலிருந்து திரு.வி.க. பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் வாகனங்கள்கொடி மரச் சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டு – வாலாஜா பாயின்ட் அண்ணா சாலை வழியாகத் தங்களதுஇலக்கை சென்றடையலாம். ஆர்.கே. சாலையிலிருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம்.தெருசந்திப்பில் திருப்பி விடப்படும். அவ்வாகனங்கள் ராயப்பேட்டை ஹை ரோடு, லஸ் கார்னர், ஆர்.கே. மடம் சாலைவழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம். மத்திய கைலாஷிலிருந்து வரும் வாகனங்கள் பெசன்ட் அவென்யூ சாலையை நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாகனங்கள் எல்.பி. (LB) சாலை, சாஸ்திரி நகர், திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கைசென்றடையலாம். காந்தி மண்டபத்திலிருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. அவ்வாகனங்கள் எல்.பி. சாலை, சாஸ்திரி நகர், திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கைசென்றடையலாம். பெசன்ட் நகர் 7வது அவென்யூவில் இருந்து வரும் வாகனங்கள் எலியாட்ஸ் பீச் நோக்கி அனுமதிக்கப்படாமல், எம்.ஜி. சாலையை நோக்கி திருப்பி விடப்படும். மாநகர பேருந்துகள் மட்டும் பெசன்ட் நகர் டெப்போவிற்குஅனுமதிக்கப்படும். பெசன்ட் அவென்யூ, எம்.எல் (ML) பார்க் நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாது. எனவேபொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறைக்கு ஒத்துழைப்பைவழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu

முன்னறிவிப்பின்றி போக்குவரத்து மாற்றம்: திருப்பூர் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!

0 comments

போக்குவரத்து மாற்றத்தை ஒட்டி, திருப்பூர் புஷ்பா திரையரங்க வளைவில் நேற்று வைக்கப்பட்டிருந்த பேரிகேடு.திருப்பூர் மாநகர் போக்குவரத்தின் இதயப் பகுதியாக விளங்குவது புஷ்பா திரையரங்கு வளைவு மற்றும் ரயில் நிலையம். இந்த 2 இடங்களிலும் போக்குவரத்து [more…]

CHENNAI Tamil Nadu

ஸ்மார்ட் ட்ராஃபிக் சிஸ்டம்.. சென்னையில் குறைக்கப்பட்ட சிக்னல்.. இனி யூ டர்ன்தான்!

0 comments

சென்னையின் முக்கிய சிக்னல்களில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க, ‘ஸ்மார்ட் ட்ராஃபிக் சிஸ்டம்’ கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த திட்டம் சென்னை முழுக்க தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக [more…]