National

விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. 20000 கோடி வழங்க.. வாரணாசி வருகிறார் பிரதமர் !

வாராணசி: உத்தர பிரதேசத்தில் உள்ள தனது தொகுதியான வாராணசிக்கு பிரதமர் மோடி இன்று வருகிறார். அங்குள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபாடு செய்யும் அவர், விவ சாயிகளை சந்தித்து பேசி, ‘பிஎம். கிசான் நிதி’ [more…]

Special Story

மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த மக்கள்.. வாரணாசியில் வினோதம் !

வாராணசி: நாட்டின் வட மாநிலங்களில் வரலாறு காணாத வெப்ப சூழல் நிலவி வரும் வேளையில் வருண பகவானை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாராணசி பகுதியை சேர்ந்த [more…]

Tamil Nadu

போலி ஆபாச வீடியோவை வைத்து ஆதீனத்தை மிரட்டியவர் கைது!

தருமபுர ஆதீனத்தை போலி ஆபாச வீடியோவை வைத்து மிரட்டிய வழக்கில், தேடப்பட்டு வந்த ஆதீன உதவியாளர் செந்தில் உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையில் உள்ள பழமை வாய்ந்த தருமபுரம் [more…]

National

வாரணாசியில் மோடி..கடந்த முறையை விட வித்தியாசம் குறைவான வெற்றி !

உத்தரபிரதேசம்: உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி 1.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இது கடந்த 2019-ம் ஆண்டு அவர் வென்ற வாக்குவித்தியாசத்தை விட குறைவு என்பது கவனிக்கத்தக்கது. [more…]

National

ஒற்றைப் பயணியால் டெர்மினலுக்கே திரும்பிய இண்டிகோ விமானம்!

மும்பையிலிருந்து கிளம்ப யத்தனித்த விமானம் ஒன்று, அதில் நின்றபடி பயணித்தவரால் மீண்டும் டெர்மினலுக்கேதிரும்பியது. விமான பயணம் என்பது சாதாரணமாகி வரும்போது, அதில் விசித்திரங்கள் பலவும் அரங்கேறி வருகின்றன. அப்படியான விசித்திரம் ஒன்றுக்கு, இன்று காலை மும்பையிலிருந்து வாராணசிக்கு கிளம்பிய இண்டிகோ விமானம்ஆளானது. விமானம் தனது பறத்தலுக்கு முந்தைய ஓடுதள பாதை பயணத்தை எட்ட இருந்தபோது, விமானத்தின்கடைசி இருக்கையருகே பயணி ஒருவர் நின்றபடி பயணிப்பதை விமான சிப்பந்தி ஒருவர் கண்டறிந்தார். அவர் விடுத்த எச்சரிக்கையை அடுத்து, இண்டிகோ விமானம் தனது பறத்தல் முயற்சியை கைவிட்டு மீண்டும்டெர்மினலுக்கே திரும்பியது. நின்றபடி பயணித்தவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இண்டிகோ விமானசேவை நிறுவனத்தின் தவறு வெளிப்பட்டது.  விமான சேவை நிறுவனங்கள், தங்கள் பயணியர் விமானங்கள் காலி இருக்கைகளுடன் பறப்பதை தவிர்க்க சிலநேரங்களில், இருக்கைகளின் எண்ணிக்கைக்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்கும். போதிய எண்ணிக்கையில் பயணிகள் திரளாதது, கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்யும் பயணிகள் உள்ளிட்டகாரணங்களினால் பொதுவாக, இந்த கூடுதலாக விற்பனையாகும் டிக்கெட்டுகளால் பிரச்சினைகள் எழுவதில்லை. ஆனால் மும்பையிலிருந்து வாராணசிக்கு இன்று காலை கிளம்பிய இண்டிகோ விமானத்தில், அதன் இருக்கைகள்அனைத்தும் நிரம்பியிருந்தது. பயணிகளில் ஒருவர் தனக்கான இருக்கை கிடைக்காததில், விமானத்தின் கடைசிவரிசையில் நின்றபடி தத்தளித்துக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட நகரப் பேருந்து போல அந்த இண்டிகோ விமானம், நின்றபடி பயணிப்பவருடன் வானில் பறக்கஇருந்தது. விமான நிலையத்தின் டெர்மினலில் இருந்து ஓடுபாதைக்கு செல்வதற்கான ’டாக்ஸிங்’ எனப்படும் ஊர்ந்துசெல்லும் பயண நேரத்தில், கூடுதல் பயணியை விமான சிப்பந்தி கண்டுகொண்டார்.  இதனால் மீண்டும் டெர்மினலுக்கு திரும்பிய இண்டிகோ விமானம், ஒற்றைப் பயணியை இறக்கிவிட்டு, மீண்டும்ஒருமுறை வழக்கமான சரிபார்ப்பு நடைமுறைகளுக்குப் பின்னரே கிளம்பியது. இதனால் சுமார் ஒரு மணி நேரதாமதத்துக்குப் பின்னரே அந்த விமானம் வாராணசிக்கு கிளம்பியது.

National

மோடியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் ?!

பிரதமர் மோடியை போல் மிமிக்ரி செய்து புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஷ்யாம் ரங்கீலா, மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து வாராணசியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த ஷ்யாம் ரங்கீலா, பிரதமர் மோடி [more…]