Tamil Nadu

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் திட்டமதிப்பு திடீரென உயர்வு!

மதுரையில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையின் திட்டமதிப்பு ரூ.1,978 கோடியில் இருந்து ரூ.2,021 கோடியாக திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் தோப்பூரில் 221 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான திட்டத்திற்கு மத்திய அரசு டிசம்பர், 2018-ம் [more…]

Tamil Nadu

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என மே 10ம் தேதி சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு பரிந்துரைத்த நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் [more…]

Tamil Nadu

எய்ம்ஸ் முதல் கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கியது!

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதல் கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு 2015-ம் ஆண்டு அனுமதி வழங்கியது. இதற்காக திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தோப்பூரில் [more…]

POLITICS

இது பாஜகவின் தேர்தல் நாடகம்… திமுக !

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிருக்கவிருக்கும் நிலையில் மத்திய அரசு அவசர அவசரமாக பூமி பூஜை போட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப்பணி தொடங்கியது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது. கட்டுமானப் பொருட்கள் ஏதும் இல்லாமல் காலியிடமாக இருப்பதால் [more…]

Tamil Nadu

ரூ.240 கோடியில் எய்ம்ஸ்க்கு இணையாக மருத்துவமனை!

மத்திய அரசு அரசியலுக்காக தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்தை துவங்குவதாகவும், எய்ம்ஸ்க்கு இணையாக கிண்டியில் ரூ.240 கோடியில் 13 மாத காலத்திற்குள் மருத்துவமனை கட்டி இருப்பதாகவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். கோவையில் கலைஞர் நூலகம் [more…]

Tamil Nadu

அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகளுக்குப் பின் கட்டுமானப் பணி தொடக்கம்!

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஜனவரி 2019-ம் ஆண்டு [more…]

POLITICS Tamil Nadu

‘நிலம் ஆர்ஜிதம் செய்யாமல் அடிக்கல் நாட்டிய இபிஎஸ்’ -அமைச்சர் மா.சுப்ரமணியன்!

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் ஆர்ஜிதம் செய்யாமல் அடிக்கல் நாட்டியிருந்தால், முதல் குற்றவாளி எடப்பாடிபழனிசாமி தான் என புதுச்சேரியில் தமிழ்நாடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டியுள்ளார். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டிவெங்கடசுப்பா ரெட்டியார் சாலையில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், அரசுகொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்தன் உள்ளிட்டோர் சிலைக்கு மாலை அணிவித்துமரியாதை செலுத்தினர். அவர்களை தொடர்ந்து பல்வேறு கட்சியினர், மீனவ அமைப்புகள் சிங்காரவேலர் சிலைக்குமாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். புதுச்சேரி திமுக சார்பில் சிங்காரவேலர் சிலைக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன் பிறகுசெய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்ரமணியன், ”புதுச்சேரியை பின்பற்றி தமிழகத்திலும் பஞ்சுமிட்டாய்விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வண்ண நிறத்தில் உள்ள பஞ்சுமிட்டாய்க்கு மட்டுமே தடைவிதிக்கப்படுகிறது. வெண்மை நிறத்தில் உள்ள பஞ்சு மிட்டாய்க்கு தடை இல்லை.” என்றார். மேலும், ”மதுரை எய்ம்ஸ் கல்லூரி விவகாரத்தில், தூங்கும் நபர்களை எழுப்பி விடலாம் தூங்குவது போல் நடிக்கும்நபர்களை எழுப்ப முடியாது. மதுரை எய்ம்ஸ் கல்லூரி கட்டுமானத்தில் ஏன் காலதாமதம் ஆகிறது? 2019 பிரதமர்மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது பிரதமரை அழைத்து வந்தது அப்போதைய முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி. நிலம் ஆர்ஜிதம் செய்யப்படாமல் யாருக்கோ சொந்தமான ஒரு இடத்தில் மருத்துவ கல்லூரி கட்ட எப்படி அடிக்கல்நாட்டப்பட்டது? யாருக்கோ சொந்தமான இடத்தில் அடிக்கல் நாட்ட ஒரு மாநில முதலமைச்சர், எப்படி பிரதமரைஅழைத்து வந்தார்? நிலம் ஆர்ஜிதம் செய்யப்படாமல் வேறு ஒருவருக்கு சொந்தமான இடத்தில் அடிக்கல்நாட்டியிருந்தால், அதில் முதல் குற்றவாளி பழனிசாமி தான். அது தெரியாமல் பிரதமர் அடிக்கல் இருந்தால் அவரும்குற்றவாளி தான்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ”2020ம் ஆண்டு நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இதற்கானஆதாரங்களை சமர்ப்பித்த பிறகு, 2023ல் நில ஆர்ஜிதம் செய்யப்படாமல் இருப்பதால்தான் எய்ம்ஸ் கல்லூரிகாலதாமதம் என்று நிதி அமைச்சர் கூறுவது பொறுப்பற்றது. இந்தியாவில் உள்ள மற்ற எய்ம்ஸ் கல்லூரிக்கு எல்லாம்நிதி ஆதாரம் கொடுக்கும் மத்திய அரசு தமிழகத்தில் உள்ள கல்லூரிக்கு மட்டும் நிதி தர மறுக்கிறது. என்ன காரணம்என்று தெரியவில்லை“ என்று தெரிவித்தார்.

HEALTH National

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

0 comments

ஹரியாணா மாநிலம், ரேவாரி, மஜ்ரா பால்கி கிராமத்தில் ரூ.1,650 கோடியில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். ஹரியாணா மாநிலம், ரேவாரி மாவட்டம், மஜ்ரா பால்கி கிராமத்தில் ரூ.1650 [more…]

National Tamil Nadu

அக்டோபர் 2026-க்குள் மதுரை எய்ம்ஸ் கட்டி முடிக்க இலக்கு !

0 comments

தமிழகத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளில் காலதாமதம் ஏன் என்பது குறித்து திமுக எம்பி கதிர் ஆனந்த் மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் இதற்கு மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார். மதுரையில் கட்ட அறிவிக்கப்பட்ட [more…]

National

எய்ம்ஸ் மருத்துவமனையின் 2வது தளத்தில் தீ விபத்து!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தில் இன்று காலை 6 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் [more…]