POLITICS

அதிமுக கூட்டணியில் பாமக !

மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியுடன் அதிமுக – பாமக இடையே கூட்டணி உறுதியானது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாமகவை [more…]

POLITICS Tamil Nadu

இபிஎஸ்சுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய ஏ.வி.ராஜூ!

0 comments

தன்னை கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜூ சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி [more…]

POLITICS

மக்கள் சக்தி பெற்ற இயக்கம் அதிமுக… இபிஎஸ் !

நெய்வேலி டவுன்ஷிப் செவ்வாய் சந்தை அருகே, ரூ. 10 லட்சம் செலவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவ சிலையை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று இரவு திறந்து வைத்தார். கடலூர் [more…]

POLITICS Tamil Nadu

தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது – இபிஎஸ்!

0 comments

திமுக ஆட்சி தொடர்ந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது எனவும், இரட்டை இலை சின்னத்தை இனி யாராலும் முடக்க முடியாது எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் [more…]

POLITICS Tamil Nadu

எந்தவொரு மக்கள் நலத்திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை – இபிஎஸ்!

விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் அரசாக திமுக அரசு உள்ளது என அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி கூறியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் அதிமுகவில் இணையும் [more…]

POLITICS

சிறுபான்மையினரை திமுக கண்டு கொள்ளவில்லை… இபிஎஸ் !

பாஜக உடனான கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்ததற்கு பின்னர் சிறுபான்மையினர் தங்களை நோக்கி வருவதாகவும், இதனால் தான் சிறுபான்மையினரை அழைத்து முதலமைச்சர் பேசியதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் [more…]

POLITICS Tamil Nadu

‘நிலம் ஆர்ஜிதம் செய்யாமல் அடிக்கல் நாட்டிய இபிஎஸ்’ -அமைச்சர் மா.சுப்ரமணியன்!

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் ஆர்ஜிதம் செய்யாமல் அடிக்கல் நாட்டியிருந்தால், முதல் குற்றவாளி எடப்பாடிபழனிசாமி தான் என புதுச்சேரியில் தமிழ்நாடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டியுள்ளார். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டிவெங்கடசுப்பா ரெட்டியார் சாலையில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், அரசுகொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்தன் உள்ளிட்டோர் சிலைக்கு மாலை அணிவித்துமரியாதை செலுத்தினர். அவர்களை தொடர்ந்து பல்வேறு கட்சியினர், மீனவ அமைப்புகள் சிங்காரவேலர் சிலைக்குமாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். புதுச்சேரி திமுக சார்பில் சிங்காரவேலர் சிலைக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன் பிறகுசெய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்ரமணியன், ”புதுச்சேரியை பின்பற்றி தமிழகத்திலும் பஞ்சுமிட்டாய்விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வண்ண நிறத்தில் உள்ள பஞ்சுமிட்டாய்க்கு மட்டுமே தடைவிதிக்கப்படுகிறது. வெண்மை நிறத்தில் உள்ள பஞ்சு மிட்டாய்க்கு தடை இல்லை.” என்றார். மேலும், ”மதுரை எய்ம்ஸ் கல்லூரி விவகாரத்தில், தூங்கும் நபர்களை எழுப்பி விடலாம் தூங்குவது போல் நடிக்கும்நபர்களை எழுப்ப முடியாது. மதுரை எய்ம்ஸ் கல்லூரி கட்டுமானத்தில் ஏன் காலதாமதம் ஆகிறது? 2019 பிரதமர்மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது பிரதமரை அழைத்து வந்தது அப்போதைய முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி. நிலம் ஆர்ஜிதம் செய்யப்படாமல் யாருக்கோ சொந்தமான ஒரு இடத்தில் மருத்துவ கல்லூரி கட்ட எப்படி அடிக்கல்நாட்டப்பட்டது? யாருக்கோ சொந்தமான இடத்தில் அடிக்கல் நாட்ட ஒரு மாநில முதலமைச்சர், எப்படி பிரதமரைஅழைத்து வந்தார்? நிலம் ஆர்ஜிதம் செய்யப்படாமல் வேறு ஒருவருக்கு சொந்தமான இடத்தில் அடிக்கல்நாட்டியிருந்தால், அதில் முதல் குற்றவாளி பழனிசாமி தான். அது தெரியாமல் பிரதமர் அடிக்கல் இருந்தால் அவரும்குற்றவாளி தான்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ”2020ம் ஆண்டு நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இதற்கானஆதாரங்களை சமர்ப்பித்த பிறகு, 2023ல் நில ஆர்ஜிதம் செய்யப்படாமல் இருப்பதால்தான் எய்ம்ஸ் கல்லூரிகாலதாமதம் என்று நிதி அமைச்சர் கூறுவது பொறுப்பற்றது. இந்தியாவில் உள்ள மற்ற எய்ம்ஸ் கல்லூரிக்கு எல்லாம்நிதி ஆதாரம் கொடுக்கும் மத்திய அரசு தமிழகத்தில் உள்ள கல்லூரிக்கு மட்டும் நிதி தர மறுக்கிறது. என்ன காரணம்என்று தெரியவில்லை“ என்று தெரிவித்தார்.

POLITICS

முற்றிலும் முரணாக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்… ஓபிஎஸ் !

0 comments

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் இரட்டை நிலைபாடு எடுத்து தனது சுயநலத்துக்காக எடப்பாடி பழனிசாமி திமுகவிடம் சரணாகதி அடைந்துவிட்டார் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2022ஆம் [more…]

Tamil Nadu

மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

0 comments

திருச்சி : திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வாளவந்தான்கோட்டையில் அமைந்துள்ள சுங்கச் சாவடிக்கு அருகே, விதிகளுக்கு மாறாக துவாக்குடியில் புதிதாக சுங்கச் சாவடி அமைக்கப்பட்டுள்ளதற்குக் காரணமான மத்திய அரசையும், திமுக அரசையும் கண்டித்து அதிமுக சார்பில் [more…]

Tamil Nadu

சட்டப்பேரவையில் கேள்விகளும் பதில்களும் !

மிக்ஜாம் புயல், தென்மாவட்ட கனமழை பாதிப்புக்கு தமிழக அரசு எவ்வளவு செலவு செய்துள்ளது என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பினார். விவாதம் தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் [more…]